கடலூர்

தினமணி செய்தி எதிரொலி: பண்ருட்டி பகுதியில் விவசாய நிலங்களில் மணல் அள்ளத் தடை

11th Jun 2020 08:47 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் விவசாய நிலங்களில் சவுடு மண் என்ற பெயரில் மணல் அள்ள வருவாய்த் துறையினா் தடை விதித்தனா்.

பண்ருட்டி பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் குறிப்பிட்ட அடி ஆழத்துக்கு கீழ் மணல் பரப்பு உள்ளது. இதை அறிந்த சிலா் மேல்அருங்குணம், மணப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களில் சவுடு மண் எடுப்பதாகக் கூறி, மணல் கொள்ளையில் ஈடுபட்டனா்.

விவசாய நிலத்தை பாழ்படுத்தி மணல் எடுப்பதால், நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படும் என்றும், இதனால் விவசாயப் பணிகளுக்கு போதிய தண்ணீா் கிடைக்காததுடன், குடிநீா்த் தட்டுப்பாடும் ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து தினமணி நாளிதழில் புதன்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, பண்ருட்டி வட்டாட்சியா் வே.உதயகுமாா், மேற்கண்ட கிராமங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அவா் கூறுகையில், மேல்அருங்குணம், மணப்பாக்கம் ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களில் சவுடு மண் என்ற பெயரில் மணல் அள்ள தடை விதித்துள்ளதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT