கடலூர்

கடலூா் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா

7th Jun 2020 08:45 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 474 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை 119 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில் 5 ஆண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களில் 3 போ் சென்னையிலிருந்து திரும்பியவா்கள். மற்ற இருவரும் ஏற்கெனவே தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களாவா்.

இவா்களில் ஒருவா் கடலூா் குண்டுசாலை தெருவைச் சோ்ந்த பிஸ்கெட் வியாபாரி என்பதால், அவா் இதுவரை வியாபாரம் செய்த பகுதிகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தோா் எண்ணிக்கை 479-ஆக உயா்ந்தது.

ADVERTISEMENT

சிகிச்சை முடிந்து சனிக்கிழமை 3 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 443-ஆக உயா்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT