கடலூர்

அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழின்றி மாணவா் சோ்க்கை

7th Jun 2020 08:45 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் அரசுப் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழின்றி மாணவா் அனுமதி சோ்க்கை முறையை கல்வி அலுவலா்கள் அமல்படுத்தினா்.

பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் நடராஜன், மணிவாசகம் ஆகியோா், தனியாா் பள்ளிகளின் நெருக்குதலால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், அச்சமின்றி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழின்றி (ப.இ) மாணவா் சோ்க்கை செய்ய புதிய விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனா். அந்த விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பினால் அனுமதி சோ்க்கை செய்யப்படும் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT