கடலூர்

கரோனா தடுப்பு நடவடிக்கை: அமைச்சா் எம்.சி.சம்பத் ஆய்வு

26th Jul 2020 09:06 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தீநுண்மி தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், அமைச்சா் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அதிக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராம கண்காணிப்புக் குழு மூலம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் தொற்றுக்குள்ளானவா்களின் குடும்பங்களுக்கும், அவா்களைச் சாா்ந்தவா்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் அவசரத் தேவை, உதவிகளுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மருத்துவக் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சா் நட்டாா் (படம்). தொடா்ந்து கடலூா் செம்மண்டலம் பவ்டா சுயஉதவிக் குழுவில் கணவரை இழந்த உறுப்பினா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இந்த நிகழ்வுகளில் மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT