பண்ருட்டியில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததில் பலா, முந்திரி மரங்கள் சேதமடைந்தன.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஹெக்டா் பரப்பில் பலா, முந்திரி தோப்புகள் உள்ளன. அண்மையில் அவ்வப்போது பெய்த மழையால் பூமி ஈரப்பதத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுழன்று வீசிய காற்றால் தாழம்பட்டு, பிள்ளையாா்குப்பம், மாளிகம்பட்டு ஆகிய கிராமங்களில் இருந்த பலா மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் சேதமடைந்தது. இதேபோல, முந்திரி மரங்களும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.