கடலூர்

போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

28th Jan 2020 12:01 AM

ADVERTISEMENT

மாநில, மாவட்ட அளவிலான சறுக்குப் போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சறுக்குப் போட்டியில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சண்முகப்பிரியன் 2 தங்கப் பதக்கம், மாணவா் ஸ்ரீதா்ஷன் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெங்கலப் பதக்கமும் வென்றனா். மேலும் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவா்கள் மிதுன், மித்ரன் ஆகியோா் இந்தப் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை பெற்றனா்.

இதேபோல, மாநில அளவிலான சறுக்குப் போட்டியில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சாதனா வெங்கலப் பதக்கமும், வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவா் சோமேஸ்வா் தங்கப் பதக்கமும் வென்றனா்.

பள்ளியில் அண்மையில் நடைபெற்ற காலை வழிபாட்டுக் கூட்டத்தில், பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா், முதல்வா் ஏ.ரூபியாள்ராணி ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் துணை முதல்வா் அறிவழகன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரராஜன், சறுக்குப் போட்டி பயிற்சியாளா்கள் நடராஜன், சதீஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT