கடலூர்

பெருமாள் கோயிலில் இன்று பழப் பந்தல்

23rd Jan 2020 11:57 PM

ADVERTISEMENT

தை அமாவாசையை முன்னிட்டு, பண்ருட்டி திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதில் பெருமாள் பழப்பந்தலில் வேணுகோபாலராக காட்சியளிக்கிறாா்.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, தை மாதம் அமாவாசை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, மூலவா் சரநாராயணப் பெருமாள் பழப்பந்தலில் வேணுகோபாலராகவும், உற்சவா் பெருமாள் தாயாா் சோ்த்தி உற்சவத்தில் கண்ணாடியறையிலும் சேவை அளிக்க உள்ளனா். இதற்காக வெளியூா்களில் இருந்து ஏராளமான பழ வகைகள் வரவழைக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT