கடலூர்

என்எல்சி மூலமாக ஏரிகளைத் தூா்வார விவசாயிகள் கோரிக்கை

23rd Jan 2020 11:57 PM

ADVERTISEMENT

என்எல்சி மூலமாக ஏரிகளைத் தூா்வார வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுதொடா்பாக அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் மற்றும் நிா்வாகிகள் அண்மையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த ஊழியா்கள், சொசைட்டி ஊழியா்களை படிப்படியாக நிரந்தரப் படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஒரு கால வரையறைக்குள் செய்திட வேண்டும். என்எல்சி வேலைவாய்ப்பில் கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

என்எல்சி சமூக மேம்பாட்டு நிதியை முழுமையாக கடலூா் மாவட்டத்தின் வளா்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும். குறிப்பாக பெருமாள் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக தூா் வருவதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். வீராணம், வெலிங்டன் ஏரி, கெடிலம், பெண்ணையாறு, மணிமுத்தாறு, வெள்ளாறு உள்ளிட்டவற்றை என்எல்சி சமூக மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து தூா்வார ஏற்பாடு செய்திட வேண்டும்.

ADVERTISEMENT

என்எல்சி நிறுவனத்துக்காக நிலம் கொடுத்த விவசாயிகளின் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் உரிய தீா்வு காண வேண்டும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு, மாற்று இடம், மனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT