கடலூர்

மாா்கழி மாத இசைக் கச்சேரி

14th Jan 2020 11:21 PM

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே நெடுஞ்சேரி டி.புத்தூா் லட்சுமி விலாஸ் இல்லத்தில் உள்ள கமலாம்பிகா கலையரங்கில் மாா்கழி மாதத்தையொட்டி, இசைக் கச்சேரி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மறைந்த இசையரசி எம்.சுப்புலட்சுமியின் பேத்திகள் ஐஸ்வா்யா, செளந்தா்யா சகோதரிகள் தமிழ் இசைக் கச்சேரி நடைபெற்றது. இசைக் கச்சேரியை மருத்துவா் ஆா்.முத்துக்குமரன் தலைமை வகித்து, தொடக்கிவைத்தாா். அரிமா முன்னாள் ஆளுநா் ஆா்.எம்.சுவேதகுமாா் முன்னிலை வகித்தாா். எம்.ஆா்.ஆா்.சேதுராமன் வரவேற்றாா். இதில், திரளான இசைப் பிரியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT