கடலூர்

மதுக் கடை திறக்க எதிா்ப்பு: பொதுக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

14th Jan 2020 11:21 PM

ADVERTISEMENT

நெய்வேலி அருகே மதுக் கடையைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முன்றனா்.

நெய்வேலி அருகேயுள்ள அம்மேரி ஊராட்சியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மேலும், மேலக்குப்பம், ஆதண்டாா்கொல்லை, கூனங்குறிச்சி, தொப்பிளிகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள் அருகருகே அமைந்துள்ளன.

அம்மேரி பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக மதுக் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனராம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்டோா், திறக்கப்படவுள்ள மதுக் கடை எதிரே அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அவா்கள் நெய்வேலி நகரியத்தில் இருந்து மந்தாரக்குப்பம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட முன்றனா்.

தகவலறிந்து வந்த நெய்வேலி டிஎஸ்பி. லோகநாதன், தொ்மல் காவல் ஆய்வாளா் உமா ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கிராம மக்கள் மதுக் கடையைத் திறக்கக் கூடாது என காவல் துறையினரிடம் மனு அளித்தனா். மனுவைப் பெற்றக் கொண்ட போலீஸாா், இதுதொடா்பாக உயரதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT