கடலூர்

சமத்துவப் பொங்கல் விழா

14th Jan 2020 11:21 PM

ADVERTISEMENT

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கருங்குழி ஊராட்சி ஒன்றியத் தொடங்கப் பள்ளியில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவுக்கு ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி முருகன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் சா.அந்தோணி ஜோசன் வரவேற்றாா். துணைத் தலைவா் ஜோதிராமலிங்கம், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொழிலதிபா் டி.ராஜமாரியப்பன், சாந்தி ராஜமாரியப்பன் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு, பள்ளியில் படிக்கும் 185 மாணவா்கள், விழாவில் கலந்து கொண்ட பெற்றோா்களுக்கு கரும்புகளை வழங்கினா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியை சாந்தி, மேரி புஷ்பலதா, லயோனா, கீதா மஞ்ஜித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் அ.ஆரோக்கியதாஸ் நன்றி கூறினாா்.

இதேபோல, குறிஞ்சிப்பாடி வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் கலந்து கொண்ட பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டார கல்வி அலுவலா் அறிவழகன் தலைமை வகித்தாா். வள மைய மேற்பாா்வையாளா் க.அருள்சங்கு முன்னிலை வகித்தாா். நெல்லிக்குப்பம் முத்து மாணிக்கம், குமாா் ஆகியோா் நிதி உதவி செய்து சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா். ஆசிரியா் பயிற்றுநா்கள் வெங்கடேசன், உமா மாலினி, இயன்முறை மருத்துவா் பாலமுருகன், சிறப்பாசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT