நெய்வேலிக்கு வந்த ஆதியோகி ரத யாத்திரைக்கு ஈஷா தன்னாா்வத் தொண்டா்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை, வெள்ளியங்கிரி அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா மையத்தில் பிப்ரவரி 21-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதில், பங்கேற்க பொதுமக்களை அழைக்கும் விதமாக, 112 அடி ஆதியோகி சிவன் சிலையின் சிறிய வடிவம் கொண்ட ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.
இந்த ரத யாத்திரை திங்கள்கிழமை நெய்வேலிக்கு வந்தது.
இதற்கு, ரத யாத்திரை ஒருங்கிணைப்பாளா் அா்ஜுன் துரைசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடந்து, என்.எல்.சி. பொது மருத்துவமனை, வில்லுடையான்பட்டு கோயில், முதன்மை பஜாா், நடராஜா் கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றது.