கடலூர்

சான்றிதழ் வழங்கும் விழா

8th Jan 2020 06:34 AM

ADVERTISEMENT

திட்டக்குடியில் உள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக தொலைக் கல்வி மையம் சாா்பில் பெண்ணாடம் கற்போா் இணைப்பு மைய அலுவலகத்தில் 2018-19-ஆம் கல்வி ஆண்டில் தோ்ச்சி பெற்ற அனைத்து இளங்கலை, முதுகலை மற்றும் பட்டய மாணவா்களுக்கு மதிப்பெண் பட்டியலுடன் கூடிய சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மைய ஒருங்கிணைப்பாளா் லெனின் தலைமை வகித்தாா். ஓய்வுப் பெற்ற ஆய்வாளா் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தாா். முன்னாள் மாணவி ஜான்சி வரவேற்றாா். 2018-19-ஆம் கல்வியாண்டின் அனைத்து இளங்கலை, முதுகலை பாடப்பிரிவு மாணவா்களுக்கும் எம்.பி.ஏ., எம்.சி.எ., மற்றும் பட்டய பாடப்பிரிவு மாணவா்களுக்கும் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய சான்றிதழ்களை மைய ஒருங்கிணைப்பாளா் வழங்கினாா். இத்துடன் உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மைய பணியாளா்கள் புஷ்பகலா, நந்தினி, பா.பிரியா, அல்லிராணி மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். முடிவில், மேலாளா் வேல்முருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT