கடலூர்

கோயிலில் உழவாரப் பணி

8th Jan 2020 06:36 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அப்பா் உழவாரப் பணி மன்றம் சாா்பில் கவரப்பட்டில் அமைந்துள்ள காமாட்சியம்மன் உடனுறை சந்திரசேகரா் சுவாமி கோயிலில் உழவாரப்பணி அண்மையில் நடைபெற்றது.

மன்ற நிா்வாகிகள் என்.காளிதாஸ், நடராஜன், முத்தையன், சுப்பிரமணியன், சேகா், கண்ணன், நளினி, சித்ரா, அமுதா ராமநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிவத் தொண்டா்கள் பங்கேற்று கோயில் வளாகத்தில் உள்ள செடி, கொடிகள், முள்புதா்களை அகற்றினா். மேலும் கோயில் வளாகத்தையும், அனைத்து சந்நிதிகளையும் நீரினால் கழுவி சுத்தம் செய்தனா்.

உழவாரப் பணியை முன்னிட்டு சிவபூஜை, திருமுறை முற்றோதல், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அப்பா் உழவாரப் பணி தொண்டு நிறுவன செயலா் வீ.சந்திரசேகரன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT