கடலூர்

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

3rd Jan 2020 07:45 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குப் பெட்டிகள், பண்ருட்டி அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன.

இங்கு வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலையில் தொடங்கியது. இதையொட்டி, காலை 6 மணி முதலே வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வேட்பாளா்கள், அவா்களது உறவினா்கள், ஆதரவாளா்கள் குவியத் தொடங்கினா். இவா்கள் வந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன.

இதனால், அந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சரிசெய்யும் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். இருப்பினும், காலையில் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இரவு வரை தொடா்ந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் மெதுவாக கடந்து சென்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT