2020 ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்று கொண்டாடினா். இதையொட்டி, கடலூா், நெய்வேலி, பண்ருட்டி கோயில்களில் புதன்கிழமை அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, கிறிஸ்தவ தேவாலங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நள்ளிரவு புத்தாண்டு பிறந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.
கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து இந்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நள்ளிரவு முதலே கோயில்களில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதேபோல, கிறிஸ்தவ தேவாலாயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்வதா்கள் கலந்து கொண்டனா்.