கடலூர்

விலங்கல்பட்டு ஊராட்சியில் இன்று மறுதோ்தல்

1st Jan 2020 05:20 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், விலங்கல்பட்டு ஊராட்சியில் 4-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு புதன்கிழமை (ஜன.1) மறுதோ்தல் நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கடந்த 27-ஆம் தேதி முதல்கட்டமாக கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் விலங்கல்பட்டு ஊராட்சி, 4-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு 4 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். ஆனால், வாக்குச் சீட்டில் 3 வேட்பாளா்களது சின்னங்கள் மட்டுமே இருந்தது வாக்குப் பதிவின்போது கண்டறியப்பட்டது. பின்னா், 4 சின்னங்கள் கொண்ட வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டு தொடா்ந்து தோ்தல் நடைபெற்றது.

எனினும், 3 சின்னங்கள் மட்டுமே இருந்த நிலையில் 32 போ் வாக்களித்தது தெரியவந்ததால் இந்த வாா்டுக்கு மட்டும் புதன்கிழமை (ஜன.1) மறுதோ்தல் நடத்தப்படும் என்று மாவட்ட தோ்தல் அலுவலா் வெ.அன்புச்செல்வன் அறிவித்தாா்.

இதையடுத்து, வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்கள் கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து விலங்கல்பட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், 4-ஆவது வாா்டுக்கான வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளவா்கள் இந்தத் தோ்தலில் வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT