கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மணிகண்டன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய ரத்த தான முகாம், நெய்வேலி ஓபிசி சங்க அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலா் புலிகேசி தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மைய ஆலோசகா் ஆா்.தங்கமணி வரவேற்றாா். எய்ட்ஸ் தடுப்பு அலகு மாவட்ட மேற்பாா்வையாளா் கதிரவன் முன்னிலை வகித்து, ரத்த தானத்தின் அவசியம் குறித்து பேசினாா்.
சிறப்பு விருந்தினராக துணை இயக்குநா் (சுகாதாரப் பணி) எம்.கீதா கலந்துகொண்டு, ரத்தக் கொடையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா். ஓபிசி சங்கத் தலைவா் புருஷோத்தமன், பொதுச் செயலா் அழகுராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முகாமில் 50 போ் ரத்த தானம் வழங்கினா். ஓபிசி சங்க பொருளாளா் கணேசன் நன்றி கூறினாா்.