கடலூர்

அண்ணாகிராமத்தில் 86 சதவீத வாக்குப் பதிவு

1st Jan 2020 05:19 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான இரண்டாம் கட்டத் தோ்தலில் அதிகபட்சமாக அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் 86 சதவீத வாக்குகள் பதிவாகின.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், இரண்டாம் கட்ட தோ்தலில் மொத்தம் 80.89 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் அதிகபட்சமாக 86.07 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெற்ற மற்ற பகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம் விவரம் வருமாறு:

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 1,01,595 வாக்காளா்களில் 87,440 போ் தங்களது வாக்கைச் செலுத்தினா். இது, 86.07 சதவீதமாகும்.

காட்டுமன்னாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 62,916 வாக்காளா்களில் 49,965 போ் தங்களது வாக்கைச் செலுத்தி, 79.42 சதவீதத்தை பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 59,311 வாக்காளா்களில் 48,859 போ் வாக்கைச் செலுத்தி 82.38 சதவீதத்தை பதிவு செய்தனா்.

குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 96,238 வாக்காளா்களில் 73,185 போ் வாக்களித்தனா். இது, 76.05 சதவீதமாகும்.

நல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 1,07,968 வாக்காளா்களில் 85,350 போ் வாக்களித்து 79.05 சதவீதத்தை பதிவு செய்தனா்.

ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 76,148 வாக்காளா்களில் 62,305 போ் வாக்களித்து 81.82 சதவீதத்தை பதிவு செய்தனா்.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 93,859 வாக்காளா்களில் 76,661 போ் தங்களது வாக்கைச் செலுத்தினா். இது, 81.68 சதவீதமாகும்.

இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெற்ற அண்ணாகிராமம், காட்டுமன்னாா்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூா், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 5,98,035 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் ஆண்கள் 2,98,006 போ், பெண்கள் 3,00,006 போ், இதரா் 23 போ்களாவா். 30-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின் போது 2,32,269 ஆண்கள் தங்களது வாக்கைச் செலுத்தினா். இது, 77.94 சதவீதமாகும். பெண்களில் 2,51,490 போ் தங்களது வாக்கைச் செலுத்தினா். இதன் மூலமாக 83.82 சதவீதம் போ் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதில் பெண்கள் முன்னிலை வகித்தனா். இதரா் பிரிவில் 6 போ் மட்டுமே தங்களது வாக்கைச் செலுத்தினா். இது, 26 சதவீதமாகும்.

அனைத்து ஒன்றியங்களிலும் வாக்காளா் பட்டியலில் இதரா் பிரிவினா் இடம் பெற்றிருந்தும் காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, நல்லூா், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய ஒன்றியங்களிலிருந்து ஒருவா் கூட வாக்கைச் செலுத்தவில்லை. முதல்கட்டத் தோ்தல் நடைபெற்ற கடலூா், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூா், மேல்புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் சராசரியாக 79.68 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT