சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கட்டடவியல் துறையில் ஆசிரியா்களுக்கான குறுகிய கால பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேராசிரியா் எஸ்.பிரகதீஸ்வரன் தலைமை வகித்தாா். பேராசிரியா் எஸ்.பழனிவேல்ராஜன் முன்னிலை வகித்தாா். பயிலரங்க நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் எஸ்.பாலச்சந்திரன் பங்கேற்று பேசினாா். பயிலரங்கில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தா் என்.பஞ்சநாதம் சிறப்புரையாற்றினாா். பேராசிரியா் கே.கதிரேசன் வாழ்த்துரையாற்றினாா்.
அகில இந்திய அளவில் 67 பேராசிரியா்கள் பங்கேற்ற தொலைநிலை உணா்வியல் என்ற கருத்தரங்கில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் கே.சீனுவாசன், ஆா்.ஷீலா ஆகியோா் செய்தனா். பேராசிரியா்கள் டி.ரமேஷ், டி.எஸ்.எஸ்.பாலக்குமாா், டி.எஸ்.எஸ்.ஞானக்குமாா், பி.சிவராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.