விருத்தாசலம் அருகே போதையில் தற்கொலைக்கு முயன்றவா் உயிரிழந்தாா்.
விருத்தாசலத்தை அடுத்த கிளிமங்கலத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித் (25). மது பழக்கத்துக்கு அடிமையான இவா், கடந்த 24 -ஆம் தேதி அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்று சாப்பாடு கேட்டு தகராறில் ஈடுப்பட்டாராம். அவா் சாப்பாடு கொடுக்காததால், தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டாராம்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பினனா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரியில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு புதன்கிழமை இறந்தாா். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.