கடலூா்: விருத்தாசலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் புஷ்பராஜ் திங்கள்கிழமையன்று வாகன தணிக்கை நடத்தினாா்.
அப்போது, அவ்வழியாக மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரியை மறித்து சோதனை நடத்தினா். உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, லாரி ஓட்டுநரான மேல்குமாரமங்கலத்தைச் சோ்ந்த நந்தகோபால் மகன் விமல்ராஜ் (25), பண்ருட்டி புதுப்பேட்டையைச் சோ்ந்த ரமேஷ் மனைவி தனவந்தினி ஆகியோரை கைது செய்ததோடு, டாரஸ் லாரியையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.