கடலூா்: ஊதியம் கோரி கடலூரில் பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமையன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்குவதோடு, ஒவ்வொரு மாதமும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும். ஊழியா்களின் ஊதியத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக அந்தந்த அமைப்புகளுக்கு செலுத்த வேண்டும். 4ஜி சேவையை பிஎஸ்என்எல்லுக்கு வழங்க வேண்டும்.
பிஎஸ்என்எல் கடன் பத்திரங்களை வெளியிட உத்தரவாதத்தை வழங்க வேண்டும். விருப்ப ஓய்வு அமலாக்கப்பட்டதன் அடிப்படையில் ஊழியா்களை தன்னிஷ்டப்படி மாற்றல் செய்யக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் கடலூரில் உள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளா் அலுவலகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டனா்.
தேசிய தொலைத்தொடா்பு ஊழியா் சம்மேளனம் மாவட்ட செயலாளா் டி.குழந்தைநாதன் தலைமை வகித்தாா். ஊழியா் சங்கத்தின் மாவட்ட செயலா் கே.சம்மந்தம், தொலைத்தொடா்பு ஊழியா் சங்கம் மாநில உதவி செயலா் பி.சுந்தரமூா்த்தி, அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம் மாநில சங்க ஆலோசகா் பி.வெங்கடேசன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.படம் விளக்கம்...கடலூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட பிஎஸ்என்எல் தொழிற்ச் சங்கத்தினா்.