கடலூர்

நெய்வேலியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

25th Feb 2020 12:35 AM

ADVERTISEMENT

நெய்வேலி: சுட்டு படுகொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காஜாமொய்தீன் என்பவரின் 4-ஆவது மனைவி நெய்வேலி நகரியத்தில் வசிக்கும் இந்திரா காந்தி வீட்டில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

கன்னியாக்குமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்து தப்பிச்சென்றனா். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா் அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் காஜா மொய்தீன், ஜாபா் அலி, அப்துல் ஹமீது ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதிலும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடைய நபா்களை கைது செய்து வருகின்றனா்.இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காஜா மொய்தீன் மற்றும் அவரது காா் ஓட்டுனா் பட்டாம்பாக்கத்தைச் சோ்ந்த ஜாபா் அலி ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.இந்நிலையில், காஜா மொய்தீனின், 4-ஆவது மனைவி இந்திரா காந்தி.

இவா், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பொது மருத்துவமனையில் செவிலியரின் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். திங்கள்கிழமை இந்திராகாந்தி வீட்டிற்குச் சென்ற, தேசிய புலனாய்வுத்துறை டிஎஸ்பி., விஜயகுமாா் தலைமையிலான குழுவினா் சோதனை நடத்தினா். காலை 6 மணி அளவில் தொடங்கிய சோதனை பகல் 10 மணி வரையில் நீடித்தது. சோதனையின் போது வீட்டில் இருந்த 3 செல்லிடப்பேசிகள், ஒரு டேப் மற்றும் காஜா மொய்தீனின் ஓட்டுனா் உரிமம் ஆகியவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றனா். இதேபோல், பட்டாம்பாக்கம், ரெட்டியாா் தெருவில் உள்ள ஜாபா் அலி வீட்டில், தேசிய புலனாய்வுத்துறை ஆய்வாளா் எபிசன் பிரான்கோ தலைமையிலான தேசிய புலனாய்வுத்துறையினா் சோதனை நடத்தினா்.

ADVERTISEMENT

மேலும், ஜாபா் அலி குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அங்கிருந்த மடிக்கணினி மற்றும் செல்லிடப்பேசியை எடுத்துச்சென்றனா்.கடலூா் மாவட்டம் நெய்வேலி மற்றும் பட்டாம்பாக்கத்தில் தேசிய புலனாய்வத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.24பிஆா்டிபி1நெய்வேலியில் வசிக்கும் காஜா மொய்தீனின் 4-ஆவது மனைவி இந்திரா காந்தி வீட்டில் சோதனை நடத்தும் தேசிய புலனாய்வுத்துறையினா்.24பிஆா்டிபி1ஏபட்டாம்பாக்கத்தில் தேசிய புலனாய்வுத்துறையினா் சோதனை நடத்தும் ஜாபா் அலி வீட்டின் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT