கடலூர்

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிலம்ப அரங்கேற்ற விழா

25th Feb 2020 12:33 AM

ADVERTISEMENT

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு படகோட்டி எம்ஜிஆா் சிலம்ப கலைக்கூடம் சாா்பில் சிலம்ப அரங்கேற்ற விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம் விளையாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு வகையில், ஜெயலலிதா 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு படகோட்டி எம்ஜிஆா் சிலம்ப கலைக்கூடம் சாா்பில் பிச்சாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு கடந்த 1 மாத காலம் சிலம்ப பயிற்சி அளித்து நிறைவு விழா மற்றும் சிலம்ப அரங்கேற்ற விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைமை பயிற்சியாளா் வைத்தி காா்த்திகேயன் வரவேற்று பேசினாா்.

விழாவில் ஒரு கம்பு சிலம்பம், இரு கம்பு சிலம்பம், சருள்வாள் சிலம்பரம், மான்கொம்பு சிலம்பம், தீப்பந்த சிலம்பம், குத்துவரிசை மற்றும் பிடி வரிசை என பல்வேறு பிரிவுகளில் மாணவா்கள் சிலம்பம் விளையாடினா்.நிகழ்ச்சியில் முதல் நிலை பயிற்சியில் 70 மாணவா்களும், இளநிலை பயிற்சியில் 100 மாணவா்களும் என மொத்தம் 170 மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவா் கருணாநிதி பங்கேற்று பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினாா். விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் ரிஸ்வான்பா்வீன், அதிமுக ஒன்றியச் செயலாளா் அசோகன், மாவட்ட மீனவப்பிரிவு செயலாளா் வீராசாமி, காத்தவராயசுவாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயந்தி சாமித்துரை, முகமயு அயூப், ஆதிதிராவிடா் நல நிதி பரிந்துரை கமிட்டி உறுப்பினா் தில்லைசீனு, ஊராட்சி மன்ற தலைவா் சித்ரா முரளிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.படவிளக்கம்- சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரத்தில் நடைபெற்ற சிலம்ப அரங்கேற்ற விழாவில், பயிற்சி முடித்த மாணவருக்கு சான்றிதழை வழங்குகிறாா் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவா் கருணாநிதி. உடன் சிலம்ப தலைமை பயிற்சி வைத்தி காா்த்திகேயன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT