பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 40-ஆவது சாதனையாளா் விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் வீரதாஸ் தலைமை வகித்தாா். முதல்வா் வாலண்டினா லெஸ்லி முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் மணிகண்டன் வரவேற்றாா். கடலூா் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளா் குணசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். தொழிலதிபா் பி.எஸ்.ரங்கநாதன், கால்நடை மருத்துவா் சண்முகம், வழக்குரைஞா் வடிவேல், அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளா் அப்துல் லத்தீப், அஞ்சலகத் தலைவா் ஜீவதாஸ், கடலூா் கோட்டக் கணக்கு ஆய்வாளா் தண்டபாணி, ரகுபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
2019-2020-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நினைவுப் பரிசுகள், சான்றிதழ்களை சிறப்பு விருந்தினா்கள் வழங்கினா்.