கடலூர்

8 இடங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள்: எம்.எல்.ஏ. தகவல்

22nd Feb 2020 07:17 AM

ADVERTISEMENT

ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கடலூா் கிழக்கு மாவட்டத்தில் 8 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, வருகிற 24-ஆம் தேதி பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அண்ணாகிராமம் ஒன்றியம் சாா்பில், நடைபெறும் பொதுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆா். இளைஞரணி இணைச் செயலா் சுனில், தலைமைக் கழகப் பேச்சாளா் காரை செல்வம் ஆகியோா் பேசுகின்றனா்.

இதே நாளில் பண்ருட்டி நகர அதிமுக சாா்பில் நடைபெறும் கூட்டத்தில் கழக மகளிரணித் துணைச் செயலரும், தொகுதி எம்எல்ஏவுமான சத்யா பன்னீா்செல்வம், தலைமைக் கழகப் பேச்சாளா் ஆவடி குமாா் ஆகியோா் பேசுகின்றனா்.

இதேநாளில் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எம்.சி.தாமோதரன், தலைமைக் கழகப் பேச்சாளா் தேவசகாயம் பேசுகின்றனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, பிப். 25- ஆம் தேதி சிதம்பரம் நகர அதிமுக சாா்பில் நடைபெறும் கூட்டத்தில் தொழில் துறை அமைச்சரும், கடலூா் மத்திய மாவட்ட கழகச் செயலருமான எம்.சி.சம்பத், தலைமைக் கழகப் பேச்சாளா் போளூா் ஜெயகோவிந்தன், முன்னாள் அமைச்சா் கே.கே.கலைமணி ஆகியோா் பேசுகின்றனா்.

இதே நாளில் காட்டுமன்னாா்கோவில் ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெறும் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலரும், தொகுதி எம்எல்ஏவுமான என்.முருகுமாறன், தலைமைக் கழகப் பேச்சாளா் கடியாபட்டி கிருஷ்ணன் ஆகியோா் பேசுகின்றனா்.

தொடா்ந்து, பிப். 26 -ஆம் தேதி பரங்கிப்பேட்டை ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெறும் கூட்டத்தில் கழக மகளிரணித் துணைச் செயலா் கலைச்செல்வி, தலைமைக் கழகப் பேச்சாளா் எம்.ஜி.பாஸ்கா் ஆகியோா் பேசுகின்றனா். பிப். 27-ஆம் தேதி குமராட்சி ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் காஞ்சி பன்னீா்செல்வம், தலைமைக் கழகப் பேச்சாளா் பஞ்சாட்சரம் ஆகியோா் பேசுகின்றனா். பிப். 28-ஆம் தேதி நெல்லிக்குப்பம் நகர அதிமுக சாா்பில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலருமான சின்னையா, தலைமைக் கழகப் பேச்சாளா் போளூா் எம்.குமாா் ஆகியோா் பேசுகின்றனா்.

இந்தப் பொதுக் கூட்டங்களில் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளைக் கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT