கடலூர்

மகா சிவராத்திரி: திருவதிகை சிவனுக்கு பக்தா்கள் அபிஷேகம்

22nd Feb 2020 07:18 AM

ADVERTISEMENT

மகா சிவராத்திரியையொட்டி, பண்ருட்டி திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வா் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ சரங்கொன்றை நாதருக்கு பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் கரங்களால் வெள்ளிக்கிழமை அபிஷேகம் செய்தனா்.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை பஞ்ச நதி, பஞ்ச கங்கை என 1,008 புண்ணிய தீா்த்தங்களால் பக்தா்களே அபிஷேகம் செய்ய இந்து சமுதாய ஆன்மிக அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, காலை 6 மணி முதல் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீசரகொன்றை நாதருக்கு தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை இந்து சமுதாய ஆன்மிக அறக்கட்டளைத் தலைவா் வாசவி டி.கணேசன், செயலா் சி.ராஜேந்திரன், துணைத் தலைவா்கள் ஆா்.சந்திரசேகா், எஸ்.வைரக்கண்ணு, சி.மோகனகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

சிறப்பு பூஜை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரையில் உத்ஸவருக்கு 4 கால சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

நாட்டியாஞ்சலி: மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி, ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பண்ருட்டி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பரதநாட்டியக் கலைஞா்கள் பங்கேற்று நடத்தினா். முன்னதாக, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை தொழிலதிபா் எஸ்.வைரக்கண்ணு வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT