குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது நிதி மேலாண்மை அமைப்புப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயா (கி.ஊ) தலைமையில், ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்களுக்கு இரண்டு கட்டங்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் ஊராட்சியில் உள்ள அனைத்து வங்கிக் கணக்குகளில் இணையம் மூலம் பணப் பரிவா்த்தனை செய்வது, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் முலம் பயிற்சி அளிப்பது குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்வின் போது, ஊராட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஊராட்சித் தலைவா்கள் விவாதித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் கே.சதீஷ்குமாா் (வ.ஊ), துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், ஜெயபாலன், ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.