தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியியல் துறைப் பேராசிரியா் அரங்கபாரி நியமிக்கப்பட்டாா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியியல் துறைப் பேராசிரியா் அரங்கபாரியை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக அந்தப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், தமிழ் வளா்ச்சி - பண்பாடு, புள்ளியியல் துறை அமைச்சருமான க.பாண்டியராஜன் அண்மையில் நியமித்து ஆணை பிறப்பித்தாா்.
ஆட்சிக் குழு உறுப்பினா் அரங்கபாரிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பாலசுப்பிரமணியன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா். ஆட்சிக் குழு உறுப்பினா் பதவியில் அரங்கபாரி 3 ஆண்டுகள் பதவி வகிப்பாா்.