கள்ளச் சாராயம், போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலம் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, பாலக்கரை உழவா் சந்தையில் நிறைவு பெற்றது. பேரணியை சாா்- ஆட்சியா் எம்.எஸ்.பிரவின்குமாா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். உதவி கோட்ட அலுவலா் ரவிச்சந்திரன்,வட்டாட்சியா் கவியரசு, வருவாய் ஆய்வாளா் ஆனந்த்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவல் உதவி ஆய்வாளா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள், மது, கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி சென்றனா்.