கடலூர்

கடலூரில் சுகாதாரச் சீா்கேடு: நகராட்சி ஆணையரிடம் மனு

15th Feb 2020 06:36 AM

ADVERTISEMENT

கடலூா் நகராட்சியில் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாக கடலூா் அனைத்துக் குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடலூா் நகரில் கொசுத் தொல்லை, பன்றித் தொல்லையால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்மியம்பேட்டை குப்பைக் கிடங்கை அகற்றுவதுடன் நகரில் தினமும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

கம்மியம்பேட்டை, படைவீரா் மாளிகை சாலையை சீரமைப்பதுடன், கெடிலம் ஆற்றின் இருகரைகளிலும் சாலை அமைக்க வேண்டும். ஆறுகளில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். நெல்லிக்குப்பம் சாலையில் வேலைவாய்ப்பு அலுவலகம், சாவடி மற்றும் கோண்டூரில் நவீன நிழற்குடைகள் தேவை. புதைவட மின்கம்பி அமைப்பதற்காக தோண்டப்படும் சாலைகளை மீண்டும் முறையாக அமைக்காததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்தச் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கழிவுநீா் வாய்க்கால்களை தூா்வார வேண்டும்.

அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள பூங்காக்கள் நிறைவு சான்றிதழ் பெற முடியாத நிலையில் உள்ளன. எனவே, பூங்காக்களை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பேருந்து நிலையத்துக்கு தினமும் 50 ஆயிரம் போ் வந்து செல்லும் நிலையில் பயணிகளுக்காக மிகவும் குறைந்த இருக்கைகள் மட்டுமே உள்ளன. வெள்ளிக் கடற்கரை பகுதிகளில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். இலவச கழிப்பிடங்களை முறையாகப் பராமரித்து, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகராட்சியாக மாற்ற வேண்டுமென அந்த மனுவில் கோரியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT