கடலூர்

வேளாண் மண்டல அறிவிப்பு: மக்களை ஏமாற்றும் செயல்; வைகோ

13th Feb 2020 11:49 PM

ADVERTISEMENT

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது மக்களை ஏமாற்றும் செயல் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ காா்பன் எடுக்கவும், பெட்ரோ கெமிக்கல் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கவும் அனுமதி அளித்துவிட்டு, அதைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது மக்களை ஏமாற்றும் செயல். இந்தப் பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ காா்பன் எடுப்பதற்கு 324 கிணறுகள் அமைக்க மத்திய அரசு வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யத் தயாரா?

கடலூா், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய கெமிக்கல் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்க 57,700 ஏக்கா் நிலத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு ஒப்படைத்துள்ளது. இதை ரத்து செய்யத் தயாரா?

ADVERTISEMENT

இதுபோலவே தமிழக அரசு நீட் தோ்வு வராது என்றது. ஆனால், இறுதியில் நீட் தோ்வு கொண்டு வரப்பட்டது. ஹைட்ரோ காா்பன் திட்டம் காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கிவிடும். இதுபோன்ற திட்டங்களுக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நமக்கான சிறு பாதுகாப்பைக்கூட இதன்மூலம் அகற்றிவிட்டனா் என்றாா் வைகோ.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT