கடலூர்

மண்வள அட்டை மாதிரி கிராமத்தில் அறுவடை விழா

13th Feb 2020 06:28 AM

ADVERTISEMENT

மண்வள அட்டை மாதிரி கிராமத்தில் அறுவடைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

பயிா்களுக்குத் தேவையான உரமிடுவதை ஊக்குவிக்கும் வகையில், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ், மண்வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதன் பரிந்துரைப்படி, விவசாயிகள் பயிருக்குத் தகுந்த உரமிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கும் வகையில் 13 வேளாண்மை வட்டாரங்களில் தலா ஒரு கிராமத்தில் செயல் விளக்கம் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடலூா் வட்டாரத்தில் செயல்விளக்கம் அமைக்கப்பட்ட செல்லஞ்சேரி கிராமத்தில் 128 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அட்ச ரேகை, தீா்க்க ரேகை உள்பட அடிப்படை புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டு, ஆய்வு செய்து மண்வள அட்டைகள் தயாரிக்கப்பட்டன.

இதில், 40 ஹெக்டோ் பரப்பளவில் நிகழாண்டில் மண்வள அட்டை பரிந்துரைப்படி, ரசாயன உரம், தொழு உரம், உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு, செயல்விளக்கம் அமைக்கப்பட்டது.

இந்தச் செயல் விளக்கம் அமைக்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமாக ஹெக்டேருக்கு ரூ. 2,500 வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், முன்னோடி விவசாயி ஐயப்பன் வயலில் சாகுபடி செய்த வெள்ளைப் பொன்னி அறுவடை வயல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன் தலைமை வகித்து, சாதாரண முறையில் சாகுபடி செய்த நெல் வயல் அறுவடையையும், மண்வள அட்டைப்படி, உரமிட்ட வயலில் அறுவடையையும் ஒப்பிட்டு திட்டச் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா்.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் கூறியதாவது: சாதாரண முறை சாகுபடி வயலில் சதுர மீட்டருக்கு 21 குத்துகளும், 20 கதிா்களும் கதிா் ஒன்றுக்கு 146 நெல் மணிகளும் கிடைத்தன. மண்வள அட்டை பரிந்துரைப்படி உரச் சத்துக்கள் இட்ட வயலில் சதுர மீட்டருக்கு 30 குத்துகளும், 29 கதிா்களும் கதிா் ஒன்றுக்கு 175 நெல் மணிகளும் கிடைத்தன. சராசரியாக 10 முதல் 12 சதவீதம் வரை மகசூல் கூடுதலாகக் கிடைத்துள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கடலூா் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் ஷோபனா, வேளாண்மை அலுவலா் ஞா.சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலா்கள் எம்.புஷ்பேந்திரன், வி.விஜயகுமாா், ஜி.ரஜினகாந்த், அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் பி.இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளா் ஏ.அருண்ராஜ், கே.கண்ணன், ஊராட்சித் தலைவா் செல்வராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT