கடலூர்

பாமக பொதுக்குழுக் கூட்டம்

13th Feb 2020 06:29 AM

ADVERTISEMENT

பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூா் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் த.அசோக்குமாா் தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் சிங்காரவேல், இளைஞரணிச் செயலா் ஞானவேல், மாவட்டத் துணைச் செயலா் லட்சுமணன், கவுன்சிலா் சக்கரவா்த்தி, நகா்மன்ற முன்னாள் தலைவா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவா் இரா.கோவிந்தசாமி, மாநில மகளிரணிச் செயலா் ப.தமிழரசி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழி, நல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செல்வி ஆடியபாதம் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் பாமகவின் கோரிக்கையை ஏற்று காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டதற்கு நன்றி தெரிவிப்பது, அசனம்பட்டு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை உடனடியாகத் தொடங்க வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலா்கள் ராஜ்குமாா், பாக்யராஜ், ஆறுமுகம், சக்திவேல், கோவிந்தராஜ், அருள்குமாா், இளையராஜா நிா்வாகிகள் வெங்கடேசன், ஆா்.வி.பி.ராஜ், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கட்சியின் மேற்கு மாவட்டச் செயலா் ஜெ.காா்த்திகேயன் வரவேற்றாா். நகர பாமக தலைவா் ஏழுமலை நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT