கடலூர்

நெல் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

13th Feb 2020 06:31 AM

ADVERTISEMENT

காட்டுமன்னாா்கோவில் அருகே வீரானந்தபுரம் கிராமத்தில் வேளாண்மைத் துறை, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சாா்பில், அறுவடைக்குப் பின்னா், நெல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு காட்டுமன்னாா்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் அ.சித்ரா தலைமை வகித்தாா். வேளாண்மை வணிகம் - விற்பனைக் குழு எஸ் .அமுதா முன்னிலை வகித்தாா்.

அறுவடைக்குப் பின்னா், 13 சதவீத ஈரப்பதத்துடன் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வேண்டும். நெல் மூட்டைகளை அடுக்கிவைத்துப் பாதுகாக்கும் போது, பூமிக்கும் மூட்டைக்கும் இடையே இடைவெளி விட்டு அடுக்கிவைக்க வேண்டும். நெல் மூட்டைகளை பாதுகாக்க எலி நச்சுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். நல்ல விலை கிடைத்தவுடன் விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

வேளாண்மை அலுவலா் இ.ஜெயந்தி எலி ஒழிப்பு குறித்து விரிவாக விளக்கினாா். அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிக்கு எலிப் பொறி கருவி வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இடு பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT