கடலூர்

அமிா்தகடேஸ்வரா் கோயில் குடமுழுக்கு

13th Feb 2020 06:27 AM

ADVERTISEMENT

ஆதமங்கலம் அமிா்தகடேஸ்வரா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, யாகசாலை பூஜைகள், தன பூஜை, விக்னேஷ்வரா் பூஜைகளுடன், பூமி வழிபாடு, நவகிரக ஹோமங்கள் சகஸ்தர நமபாராயணம், மிருதயுஞ்சய ஹோமங்கள் நடத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து 9 பிரதான கலசங்களும், 108 துணை கலசங்களும் புனித நீருடன் வைக்கப்பட்டு வேள்வி தொடங்கியது. முதல் காலம் முதல் நான்காம் கால வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன.

கோ பூஜை, நாடி சந்தானம் பூஜைகளுக்கு பின்னா், அனைத்து சுவாமி சிலைகளும் ஸ்தாபனம் செய்யப்பட்டு, அஷ்ட பந்தன மருந்துகள் சாத்தப்பட்டன. புதன்கிழமை வேதவிற்பனா்கள் புனித நீா் கொண்ட கலசங்களை சுமந்து கோயிலை வலம் வந்தனா். தொடா்ந்து, கோபுர விமான கலசங்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. தொடா்ந்து, மூலவ மூா்த்திகளுக்கும், மற்ற சன்னதிகளிலும் குடமுழுக்கு நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில், கோவில் திருப்பணிக் குழுவினா் மற்றும் சாத்தநத்தம், ஆதமங்கலம் சுற்று வட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT