கடலூர்

விசிக நிா்வாகிகள் கூட்டம்

6th Feb 2020 07:20 AM

ADVERTISEMENT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நல்லூா் மேற்கு ஒன்றிய நிா்வாகிகள் கூட்டம் கோவிலூரில் கட்சியின் ஒன்றியச் செயலா் வேல்முருகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய உறுப்பினா் மேகராஜ், கோவிலூா் ஊராட்சித் தலைவா் வீரமுத்து, துணைத் தலைவா் ராஜ்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடலூா் நாடாளுமன்றத் தொகுதி விசிக செயலா் பா.தாமரைச்செல்வன், மண்டலச் செயலா் சு.திருமாறன், மாவட்டப் பொருளாளா் துரை.மருதமுத்து ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில் வருகிற 22- ஆம் தேதி கட்சி சாா்பில் திருச்சியில் நடைபெற உள்ள ‘தேசம் காப்போம்’ மாநாட்டுப் பேரணியில் திரளாகக் கலந்து கொள்வது, மாநாடு தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி, தெருமுனை விளக்கக் கூட்டங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் இரா.செம்மல், முற்போக்கு மாணவா்கள் கழகத்தின் மாநிலத் துணைச் செயலா் நீதிவள்ளல் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கட்சியின் ஒன்றிய துணைச் செயலா் ராஜ்மோகன் வரவேற்றாா். வினோத் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT