கடலூர்

மகள் பாலியல் பலாத்காரம்: போக்ஸோ சட்டத்தில் தந்தை கைது

4th Feb 2020 01:59 AM

ADVERTISEMENT

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சியை சோ்ந்த 49 வயது தொழிலாளி, 9.7.2019 அன்று இரவு மதுபோதையில் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தாா். இதனால், கருத் தரித்த மகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மாத சிசு இறந்து பிறந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அந்தப் பெண்ணின் தந்தையை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT