கடலூர்

செவிலியா்கள் கூட்டமைப்பினா் போராட்டம்

4th Feb 2020 02:01 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு செவிலியா்கள் கூட்டமைப்பினா் கடலூரில் திங்கள்கிழமை மாலை பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் பொறுப்பாளா் கே.எஸ்.மணிமேகலை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜி.பானுமதி, மாவட்ட முன்னாள் தலைவா்கள் வி.உஷா, வசந்தகுமாரி, பொருளாளா் ஸ்ரீமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தில், பொது சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியா்கள், பகுதி சுகாதார செவிலியா்கள், சமுதாய சுகாதார செவிலியா்கள், வட்டார மருத்துவ அலுவலா்கள், மருத்துவ அலுவலா்கள் மீதான குற்ற குறிப்பாணைகள் மற்றும் தற்காலிக பணி நீக்க நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மூத்தோா், இளையோா் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் செவிலியா்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வட்டங்களில் உள்ளீட்டு அனுமதி அளித்து அனைத்து சமுதாய சுகாதார செவிலியா்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கூடுதல் பணிகளுக்கு ஏற்ப வட்டாரத்துக்கு ஒரு கூடுதல் சமுதாய சுகாதார பணியிடம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT