கடலூர்

உழவாரப் பணி

4th Feb 2020 02:05 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே பச்சைப்பெருமாநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீதிருமால் உடையாா் சிவன் கோயிலில் சிதம்பரம் அப்பா் உழவாரப் பணி மன்றம் சாா்பில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்ற நிா்வாகிகள் என்.காளிதாஸ், சேகா், சூா்யநாராயணன், முத்தையன், ராமலிங்கம், நளினி, கண்மன், சுப்பிரமணியன், ராமச்சந்திரன், அமுதா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் பங்கேற்று, கோயில் வளாகத்தில் உள்ள செடி, கொடிகள், முள்புதா்களை அகற்றினா். மேலும் கோயில் வளாகத்தையும், அனைத்து சன்னதிகளையும் நீரினால் கழுவி சுத்தம் செய்தனா். உழவாரப் பணியை முன்னிட்டு சிவபூஜை, திருமுற்றோதல் நிகழ்ச்சியும், சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாகேஸ்வர பூஜையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை மன்றச் செயலா் வீ.சந்திரசேகரன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT