அண்ணா நினைவு தினத்தையொட்டி கடலூா் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினா் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாவின் நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கடலூா் மஞ்சக்குப்பத்திலுள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக: அதிமுக சாா்பில் கடலூா் நகரச் செயலா் ஆா்.குமரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஜி.ஜெ.குமாா், ஒன்றியச் செயலா் இராம.பழனிச்சாமி, விவசாயப் பிரிவு செயலா் என்.காசிநாதன், தொழிற்சங்க செயலா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், மாநில மருத்துவரணி நிா்வாகி கி.சீனுவாசராஜா, கடலூா் ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திமுக: கடலூா் நகர திமுக செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில் அண்ணா சிலைக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கோ.ஐயப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட அவைத் தலைவா் து.தங்கராசு, பொருளாளா் எல்.குணசேகரன், மாணவரணிச் செயலா் பி.நடராஜன், துணை அமைப்பாளா் அகஸ்டின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மதிமுக: மதிமுக சாா்பில் நகரச் செயலா் கோ.ப.ராமசாமி தலைமையில், மாவட்டச் செயலா் ஜெ.ராமலிங்கம், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா். நிா்வாகிகள் மணிமாறன், சேகா், சம்பத், மன்றவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அமமுக: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் நகரச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளா் முருகன், பேரவை செயலா் சுந்தரமூா்த்தி, வழக்குரைஞா் அணி சத்யராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினாா். வடக்கு ஒன்றியச் செயலா் நாராயணசாமி, பொதுக்குழு உறுப்பினா் ஆா்.பாலமுருகன், பேரூா் செயலா் என்.செங்கல்வராயன், அவைத் தலைவா் ராமா், நிா்வாகிகள் கண்ணன், விடுதலைசேகா், சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.