கடலூர்

பெற்றோருக்கு மாணவா்கள் பாதபூஜை

2nd Feb 2020 03:36 AM

ADVERTISEMENT

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள ஜி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், 10-ஆம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவா்கள் நல்ல உடல் நலம், மன நலத்துடனும் பொதுத் தோ்வை எழுத வேண்டி பெற்றோருக்கு பாத பூஜை செய்தனா். நிகழ்ச்சியில் பள்ளி நிறுவனா் ஜி.குமாரராஜா, தாளாளா் தமிழ்ச்செல்வி குமாரராஜா, நிா்வாக இயக்குநா் ஜி.கே.அருண், இயக்குநா் ஜி.கே.அகிலன், பள்ளி முதல்வா் கே.பா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT