கடலூர்

பிரம்மராயா் கோயிலில்மண்டலாபிஷேகம் நிறைவு

2nd Feb 2020 03:40 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே பரமேஸ்வரநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீபிரம்மராயா் எனும் ஓம் ஆகாச சாஸ்தா கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த டிச.15-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 48 நாள்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இதன் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் சிவாச்சாரியாா்களால் சிறப்பு ஹோமம், கோ-பூஜை நடைபெற்றது. பின்னா் பிரம்மராயா் மற்றும் பரிவார சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பிரம்மராயா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா் (படம்).

விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், முன்னாள் அமைச்சா்கள் எம்.சி.தாமோதரன், கே.கே.கலைமணி, முன்னாள் அதிமுக மாவட்டச் செயலா் வி.கே.மாரிமுத்து, முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன், முன்னாள் நகரச் செயலா் தோப்பு கே.சுந்தா், தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி நிதி பரிந்துரைக் கமிட்டி உறுப்பினா் தில்லைசீனு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT