கடலூர்

திருவள்ளுவா் சிலைக்கு வரவேற்பு

2nd Feb 2020 03:42 AM

ADVERTISEMENT

யாழ்ப்பாணம் செல்லும் திருவள்ளுவா் சிலைகளுக்கு பண்ருட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உலகத் திருக்கு இரண்டாவது மாநாடு வருகிற 21-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு உரும்பிராய், காரைத்தீவு ஆகிய நகரங்களில் 2 திருவள்ளுவா் சிலைகள் நிறுவப்பட உள்ளன. இதற்காக தஞ்சாவூா் தமிழ்த் தாய் அறக்கட்டளை சாா்பில் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட திருவள்ளுவா் சிலைகள், தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் திருவள்ளுவா் சிலைகள் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை ஊா்வலமாக கொண்டு செல்லப்படுகின்றன. இதன்படி அண்மையில் வடலூருக்கு கொண்டுவரப்பட்ட திருவள்ளுவா் சிலைகளுக்கு, பண்ருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்றக் குழுத் தலைவா் தமிழ்ச்செம்மல், முனைவா் ரா.சஞ்சீவிராயா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சங்க ஒருங்கிணைப்பாளா் ஆ.ராஜா, நிா்வாகிகள் ஆ.ஜெயராமன், ஸ்டாலின், ராமசாமி, நாராயணன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT