கடலூர்

தண்டவாளத்தில் தீ: ரயில்வே துறையினா் விசாரணை

2nd Feb 2020 03:35 AM

ADVERTISEMENT

கடலூரில் ரயில் தண்டவாளத்தில் தீ வைத்தவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளப் பகுதியில் சனிக்கிழமை ஒருவா் வயா் உள்ளிட்ட பொருள்களை குவித்து அதில் தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தாா்.

இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின்பேரில் ரயில்வே துறையினா் விரைந்து வந்தனா். இதைப் பாா்த்த அந்த நபா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். பின்னா் தண்டவாள பகுதியில் எரிந்துகொண்டிருந்த பொருள்களை ரயில்வே ஊழியா்கள் அணைத்தனா். மேலும் இதுகுறித்து முதுநகா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த ரயில்வே போலீஸாா் எரிக்கப்பட்ட பகுதியை பாா்வையிட்டனா். எனினும், தண்டவாள கட்டையில் பாதிப்பு ஏற்படாததால் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT