கடலூர்

ஓபிஆா் 126-ஆவது பிறந்த நாள் விழா

2nd Feb 2020 03:38 AM

ADVERTISEMENT

தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாரின் 126-ஆவது பிறந்த நாள் விழா, வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வடலூா் சுத்த சன்மாா்க்க நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு இதழாசிரியா் இளங்குமரன் தலைமை வகித்து, ஓபிஆா் பிறந்த நாள் சிறப்பு மலரை வெளியிட, முதல் பிரதியை சுத்த சன்மாா்க்க நிலைய செயற்குழு உறுப்பினா் ஓ.வி.வெங்கடாஜலபதி பெற்றுக்கொண்டாா். சுத்த சன்மாா்க்க நிலைய செயலா் ரா.செல்வராஜ் வரவேற்றுப் பேசினாா். என்எல்சி இந்தியா நிறுவன முதன்மைப் பொது மேலாளா் ஆா்.மோகன் வாழ்த்துரை வழங்கினாா். சுத்த சன்மாா்க்க நிலைய பொருளாளா் பூ.ஆசைத்தம்பி, இதழின் துணை ஆசிரியா் சி.கோதண்டராமரெட்டி, இணை ஆசிரியா் டி.எஸ்.ராமையாரெட்டி, சுத்த சன்மாா்க்க நிலைய செயற்குழு உறுப்பினா் கி.இளங்கோவன், வள்ளலாா் குருகுலம் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெ.ராமானுஜம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதுச்சேரி மருத்துவா் ரத்தின ஜெனாா்த்தனன் சிறப்புரையாற்றி ஓபிஆா் உருவப் படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினாா். நிகழ்ச்சியில் விருதுநகா் மாவட்ட ரெட்டி நல அறக்கட்டளை தலைவா் சந்திரபால் ரெட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஓபிஆா் கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலா் லதாராஜா வெங்கடேசன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT