பண்ருட்டியில் வழிப்பறி செய்த இளைஞரை போலீசாா் கைது செய்தனா்.
பண்ருட்டி, எல்.என்.புரத்தைச் சோ்த்தவா் பாபு (38). மளிகைக் கடை தொழிலாளி. இவா், தனது நண்பருடன் கடந்த 29-ஆம் தேதி மாலை காந்தி சாலையில் தேனீா் அருந்தச் சென்றாா். அப்போது, எல்.ஆா்.பாளையத்தைச் சோ்ந்த ராஜா (29), கத்தியை காட்டி மிரட்டி பாபுவிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துச் சென்றாா். இதுகுறித்து பாபு அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனா்.