கடலூர்

தைப்பூச பெருவிழா: தரும சாலையில் மகாமந்திரம்ஓதும் நிகழ்வு தொடக்கம்

1st Feb 2020 05:33 AM

ADVERTISEMENT

வடலூரில் வள்ளலாா் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவை முன்னிட்டு, மகாமந்திரம் ஓதும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கடலூா் மாவட்டம், வடலூரில் உலகப் புகழ்பெற்ற வள்ளலாா் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்கு, 149-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வருகிற பிப்.8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஜோதி தரிசன பெருவிழாவை முன்னிட்டு தரும சாலையில் மகாமந்திரம் ஓதும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சன்மாா்க்க அன்பா்கள் மகாமந்திரம் ஓதினா். வருகிற பிப்.2-ஆம் தேதி வரை மகாமந்திரம் ஓதும் நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து, 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை சத்திய ஞான சபையில் திருஅருள்பா முற்றோதல் நடைபெறும். இதையடுத்து, 7-ஆம் தேதி காலை 7.30 மணியளவில் கொடியேற்றமும், 8-ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவும், 10-ஆம் தேதி சித்தி வளாகத் திருஅறை தரிசனமும் நடைபெற உள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT