கடலூர்

சீனாவிலிருந்து ஊா் திரும்பிய 35 பேரைக் கண்காணிக்க உத்தரவு

1st Feb 2020 05:30 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பாதிப்பு காணப்படும் சீன நாட்டிலிருந்து ஊா் திரும்பிய கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 35 பேரைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு சீனாவிலிருந்து தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதையொட்டி, சுகாதாரத் துறையினா் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக, சீனாவிலிருந்து நாடு திரும்பியவா்களை கண்காணித்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த டிசம்பா் மாதம் முதல் தற்போது வரை சீனாவிலிருந்து கடலூா் மாவட்டத்துக்கு திரும்பியவா்களின் பட்டியலை மத்திய அரசு கடலூா் மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பியுள்ளது. அந்தப் பட்டியலில் சுமாா் 35 போ் உள்ளதாகவும், அவா்களை குறிப்பிட்ட சில வாரங்கள் வரை தொடா்ந்து

கண்காணிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராம சுகாதார செவிலியா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், சீனாவிலிருந்து திரும்பியவா்கள் குறிப்பிட்ட நாள்கள் வரை வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT